Connect with us

சினிமா

திரை உலகின் பளபளப்பில் எளிமையாய் நின்ற சரோஜா தேவி…! அவரது பயணத்தின் துளிகள்…!

Published

on

Loading

திரை உலகின் பளபளப்பில் எளிமையாய் நின்ற சரோஜா தேவி…! அவரது பயணத்தின் துளிகள்…!

தென்னிந்திய சினிமாவில் நற்பெயரும் நேர்மையும் ஒருங்கிணைந்த நடிப்பின் சிறப்புமிக்க நடிகை சரோஜா தேவி (87), இன்று காலமானார்.” கன்னடத்து பைங்கிளி” என அழைக்கப்பட்ட இவர், அபிநயத்தால் “சரஸ்வதி”என்ற பட்டத்தைப் பெற்றவர்.சினிமா உலகத்தில் 1950களில் அறிமுகமாகி, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்டிஆர், ராஜ்குமார், நாகேஸ்வர ராவ் ஆகிய சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து புகழடைந்தவர். எம்.ஜி.ஆருடன் மட்டும் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்திருக்கிறார். ‘திருடாதே’ படம் மூலமாக தமிழில் அறிமுகமான சரோஜா தேவி, “பாலும் பழமும்”, “வசந்தமாலிகை”, “அண்ணா” போன்ற ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.அவர் இயற்கையான முகம், அழகு, இனிமையான நடிப்பு மற்றும் நேர்மையான அணுகுமுறையின் அடையாளமாக இருந்தார். காமெடியன் வடிவேலுடன் ஏற்பட்ட ஒரு சம்பவத்தின் போது, அவர் காட்டிய பணிவு  அந்த தலைமுறையின் கலைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தது. சினிமாவை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டுமே பார்த்த சரோஜா தேவி, ஒரு கட்டத்தில்  கார் வாங்க நினைத்த போது, தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் சொன்ன வார்த்தைகள்  “சினிமா ஒரு நிரந்தரம் இல்லாத உலகம்” என்பதைக் கவனித்து, ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து, எளிமையாக வாழ்ந்தார். இதுவே அவருடைய தனித்தன்மை.தனது கணவருடன் அவர் வாழ்ந்த உறவு, அவருடைய வாழ்க்கையின் மிக முக்கிய பக்கம். கணவரின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட கண்ணின் பாதிப்பு, அவர் காட்டிய உண்மையான பாசத்தின் ஒரு அடையாளமாகவே இருக்கிறது.பிற நடிகர்களோடு எந்த வகையான சர்ச்சையும் இல்லாமல், கண்ணியமாக நடித்து வந்தவர். நடிப்பு, நடனம், அழகு மற்றும் ஒழுக்கம்  அனைத்திலும் தலைசிறந்தவராக இருந்தார். திரைப்பட ஸுட்டிங் ஸ்பாட்டுகளில் கூட, அந்தக் காலத்து பழம்பெரும் நடிகை என்ற நிலையை அனைவரும் மதித்து, மரியாதை அளித்து வந்தனர். பிதாமகன் படத்தில் கமியோ ரோலில் நடித்த அவர், கடைசி நேரத்திலும் திரையுலகை விட்டு விலகாமல் இருந்தார். அவரது நடிப்பைப் பார்த்து இன்று பலரும் நடிகையாக கனவு காண்கிறார்கள். அவரது மறைவு தென்னிந்திய சினிமாவிற்கே ஒரு பெரிய இழப்பாகும். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வோம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன