இலங்கை
துறைமுகங்களில் சிக்கியுள்ள வாகனங்கள் – அதிகரிக்கும் தாமத கட்டணங்கள்!

துறைமுகங்களில் சிக்கியுள்ள வாகனங்கள் – அதிகரிக்கும் தாமத கட்டணங்கள்!
இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இன்னும் துறைமுகங்களில் சிக்கியிருப்பதால் தாமத கட்டணங்களை செலுத்த வேண்டியிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
அவற்றை விடுவிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதற்கு உரிய பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்துமாறு கோரிய போதிலும், இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களில் சுமார் இரண்டு மாதங்களாக சுமார் 1000 வாகனங்களை விடுவிக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை