பொழுதுபோக்கு
படம் தேறாது சார்… தோல்வி தான்; முதல் நாள் ஷுட்டிங்கில் இயக்குனரிடம் சொன்ன சந்தானம்: எந்த படம் தெரியுமா?

படம் தேறாது சார்… தோல்வி தான்; முதல் நாள் ஷுட்டிங்கில் இயக்குனரிடம் சொன்ன சந்தானம்: எந்த படம் தெரியுமா?
திரைப்பட உலகில் ஒரு படம் வெற்றி பெறுமா அல்லது தோல்வியடையுமா என்பதை முன்கூட்டியே கணிப்பது என்பது அரிதானது. ஆனால், சில சமயங்களில், படப்பிடிப்பின் முதல் நாளிலேயே ஒரு படத்தின் எதிர்காலத்தை கணிக்கும் அனுபவமிக்க கலைஞர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை, பிரபல நடிகர் சந்தானம் கலாட்டாவிற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.அவர் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் ஸ்கிரிப்ட்டைப் படித்த உடனேயே, “இது ஃபிளாப் தான், வேலைக்கு ஆகாது” என்று இயக்குநரிடம் முதல் நாளிலேயே கூறிவிட்டாராம். அந்தப் படத்தின் மையக் கதைக்களத்தில் ஒரு பெரிய குறைபாடு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ திரைப்படம் எம். ராஜேஷ் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, சரண்யா பொன்வண்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக இந்த படத்தில் சந்தானத்தின் “கரினா சோப்ரா” கதாபாத்திரம் மிகவு பிரபலமடைந்தது.படத்தின் கதை பெண் வேடமிட்ட கரினா சோப்ராவை நோக்கியே நகர்ந்தது. ஆனால் படத்தில் கரினாவை பெண்ணாக காண்பிக்க சாதாரண மேக்கப் மட்டுமே இருந்தது. அதில் நிறைய மெனக்கடல்கள் இல்லை; அதுமட்டுமின்றி அவ்வை ஷண்முகி படம் ஹிட் ஆக படம் மற்றும் கதாப்பாத்திரத்திற்கு கொடுத்த முக்கியத்துவமே காரணம் என்று கூறினார். இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து பேசிய சந்தானம், “அவ்வை ஷண்முகி” போன்ற ஒரு படம் வெற்றி பெற, மேக்கப் மற்றும் அதற்கான அர்ப்பணிப்பு , முயற்சி தேவைப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் கரீனா சோப்ராவுக்கு சாதாரண மேக்கப் மட்டுமே போடப்பட்டிருந்தது. இந்தக் குறைபாட்டை ராஜேஷ் சார் மற்றும் தயாரிப்பு குழுவினரிடம் தான் எடுத்துரைத்ததாகவும், ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். “இது வொர்கவுட் ஆகாதுன்னு இத நீங்க வந்து சும்மா ஃபண்ணுக்கு பண்ணல மெயின் கேரக்டரா பண்றீங்க அதனால சென்டர் பிகர் கரீனா சோப்ரான்றதுக்கு முக்கியத்துவம் அவசியம்” என்று அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.இறுதியில், அந்தப் படம் தோல்வியடைந்ததாகவும், தனக்கு அனைத்து ஃபிளாப் படங்களும் முதல் நாளிலேயே தெரிந்துவிடும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.