இலங்கை
வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் அரசாங்கத்துக்கு இல்லை; பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டு

வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் அரசாங்கத்துக்கு இல்லை; பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டு
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய திறன் ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கத்துக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெர முனவின் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பொதுஜன பெர முனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்ததாவது:
உழைக்கும்போது செலுத்தும் வரியை குறைப்பதற்குரிய சாதகமான சூழலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சாதகமான தன்மையை பயன்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உழைக்கும் போது செலுத்தும் வரியைக் குறைத்தார். மற்றும்படி. இவர்கள் இது வரை எந்தக் காத்திரமான திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. ஏனெனில், மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் இயலுமை அரசாங்கத்திடம் இல்லை – என்றார்.