பொழுதுபோக்கு
விஜய்க்கு இது செட் ஆகாது, இன்னும் பாவர்ஃபுல்லா வேணும்; வாலி பாடலை மாற்றிய மிஷ்கின்: ‘ஆல் தோட்ட பூபதி’ ஹிஸ்டரி!

விஜய்க்கு இது செட் ஆகாது, இன்னும் பாவர்ஃபுல்லா வேணும்; வாலி பாடலை மாற்றிய மிஷ்கின்: ‘ஆல் தோட்ட பூபதி’ ஹிஸ்டரி!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘தி கோட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.‘ஜன நாயகன்’ படத்தில் நடிகர் விஜயுடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் மோனிஷா ப்ளெஸி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜய்க்கு இந்தப் படம் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த யூத் படத்தில் இடம் பெற்ற ஆல் தோட்ட பூபதி பாடலின் வரிகளை மாற்றியது தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் பேசிய விஜய் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. யூத் படம் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியாகியது. இப்படத்தை ஜித்தன், பிரியமுடன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் வின்செட் செல்வா இயக்கினார். இப்படத்திற்கு இசை மணி சர்மா அமைத்து இருப்பார். படத்தில் இடம்பெற்ற அட ஆல் தோட்ட பூபதி பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. குறிப்பாக நடிகை சிம்ரன் சேர்ந்து விஜய் ஆட்டம் பிரித்து இருப்பார். இப்பாடலுக்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் மிஷ்கின் லியோ பாடல் வெளியிட்டு விழா மேடையில் பேசுகையில், “இந்தப் பாட்டு நன்றாக இருக்கிறது. ஆனால் விஜய்க்கு இன்னும் பவர் ஃபுல்லாக இருக்க வேண்டும் எனக் கேட்டேன். பாடல் எழுதிய வாலிக்கு 50,000 ரூபாய் கொடுத்தாச்சு என்றார்கள். எனது நண்பன் கபிலன் ஆல் தோட்ட பூபதி பாடலை எழுதி இருந்தான். இந்த வரிக்காகவே பாட்டு ஹிட் ஆகும் என்று சொன்னேன். யாருமே கேட்கவில்லை. ஏன்னெனில், வாலி சாருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டார்கள். அதனால் ஒண்ணுமே செய்ய முடியாது என்று சொன்னார்கள். நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். என் சட்டையைப் பிடித்த அவர்கள், ‘மரியாதையா போயி ஷங்கர் மகாதேவனுக்கு பாட்டு சொல்லிக் கொடு’ என்றார்கள். பாட்டு சொல்லிக் கொடுக்க உள்ளே போகும் போது, எனது பேடில் முதலில் வாலி சார் பாடல் இருந்தது. கதைவைத் திறந்து உள்ளே சென்றபோது வாலி சார் பாடலை பாக்கெட்டில் வைத்து விட்டு கபிலன் பாடலை அங்கே வைத்தேன். எல்லோரும் வந்தா பாட்டை கேட்கும் போது, அது ஆல் தோட்ட பூபதி பாட்டு. அப்போது, என்னை கொன்றுவிடுவேன் என்று கூட சொன்னார்கள். என்னைக் கொல்ல முடியுமா?” என்று அவர் கூறியுள்ளார்.