இலங்கை
ஆள் மாறாட்டம் செய்து நிதி மோசடி: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

ஆள் மாறாட்டம் செய்து நிதி மோசடி: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்யும் ஒருவர், மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,
சம்பந்தப்பட்டவர் இளம் தொழில்முனைவோரை அணுகி, ஐரோப்பிய ஒன்றிய மானியங்கள் அல்லது நிதி வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தவறான வாக்குறுதிகளின் அடிப்படையில் பணம் செலுத்துமாறு, அவர்களைக் குறித்த மோசடி செய்பவர் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிதியுதவியை எளிதாக்க மூன்றாம் தரப்பு முகவர்களை ஈடுபடுத்துவதில்லை என்றும், மானிய விண்ணப்பங்கள் அல்லது கொள்முதல் கேள்விப்பத்திரங்களைச் செயலாக்குவதற்கு தனி ஆட்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து பணம் கோருவதில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் பொதுமக்கள் இந்த விடயத்தில் விழிப்பாகச் செயற்படுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை