இலங்கை
கணவனை கொலை செய்த மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

கணவனை கொலை செய்த மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்!
அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆணின் உடல் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸாருக்கு கடந்த 08 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
பின்னர், காணாமல்போன நபரின் வீட்டின் பின்புறத்தில் கடந்த புதன்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புதைக்கப்பட்டிருந்த மனித கால் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
கடந்த மே மாதம் 11 ஆம் திகதி தனக்கும் தனது கணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த வீட்டின் பின்புறத்தில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த கணவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரொருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.