இலங்கை
கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றின் மீது முறைப்பாடு!

கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றின் மீது முறைப்பாடு!
கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றின் மீது உணவு ஒவ்வாமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஹோட்டலின் பிரதான சமையலறையின் ஒரு பகுதியை கொழும்பு மாநகர சபையின் (CMC) பொது சுகாதார திணைக்களம் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஹோட்டலில் வழங்கப்படும் உணவின் தரம் நிலை தொடர்பில் வாடிக்கையாளர்கள் சமூக ஊடகங்களில் பல முறைப்பாடுகளை பகிர்ந்துள்ளனர்.
இதனை அடுத்து, பொது சுகாதார திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோட்டல் சமையலறையின் ஒரு பகுதியை தற்காலிகமாக மூடுமாறு ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.