இலங்கை
செம்மணி உண்மையை அரசே வெளிப்படுத்து; ஜோசப் ஸ்டாலின் ஆவேசம்!

செம்மணி உண்மையை அரசே வெளிப்படுத்து; ஜோசப் ஸ்டாலின் ஆவேசம்!
செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவேண்டும். ஆனால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசாங்கம் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை என்று சிவில், சமூக செயற்பாட்டாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “செம்மணி மனிதப்புதைகுழியில் பாரதூரமான குற்றமே நடந்துள்ளது. அதேபோல இலங்கையில் இதுவரையில் இப்படியான 22 மனிதப்புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், இவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மனிதப் புதைகுழிகள் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுமா என்பது தெரியவில்லை. உரிய வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. எனவே, இனியும் அரசாங்கம் பதுங்கக்கூடாது. செம்மணிப் புதைகுழி உட்பட புதைகுழி விவகாரத்துக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். உயிரிழந்த மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும்”- என்றார்.