Connect with us

பொழுதுபோக்கு

மோனிகா பாட்டு உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா? ஜுஸ் குடிக்கும்போது கூட வைப் செய்யும் பூஜா ஹெக்டே: இதை கவனிச்சிங்களா?

Published

on

pooja Hegde 23042024

Loading

மோனிகா பாட்டு உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா? ஜுஸ் குடிக்கும்போது கூட வைப் செய்யும் பூஜா ஹெக்டே: இதை கவனிச்சிங்களா?

2010 ஆம் ஆண்டு “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா” அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து புகழ்பெற்ற பூஜா ஹெக்டே இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி  (2012) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முகமூடி படத்திற்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டு  ஒகா லைலா கோசம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். “மொஹன்ஜோ தாரோ” (2016) மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார்.துவ்வடா ஜகந்நாதம், அரவிந்த சமேதா, அலா வைகுண்டபுரமுலு, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர், ராதே ஷியாம், பீஸ்ட் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கூலி திரைப்படத்தில்  மோனிகா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நடனம் மிகவும் உடல்ரீதியாக சவாலானது என்றும், கடுமையான வெப்பம், தூசி, கொப்புளங்கள் போன்றவற்றை எதிர்கொண்டு நடனமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, செல்வின் ஷாஹீர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்நிலையில் அந்த பாடல் படமாக்கப்பட்ட சவாலகளை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விவரித்துள்ளார்.அந்த போஸ்டில் அவர் ஜூஸ் குடித்துக்கொண்டே பாடலுக்கு வைப் செய்துகொண்டு இருக்கிறார்.  “மோனிகாவுக்கு இவ்வளவு அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. மோனிகா எனது திரை வாழ்க்கையின் மிகவும் உடல்ரீதியாக சவாலான மற்றும் கடினமான பாடல்களில் ஒன்றாகும். கடுமையான வெப்பம், பல மாதங்களுக்கு டேன் கோடுகளை விட்டுச்செல்லும் வெயில் தாக்கம்… ஈரப்பதம், தூசி, கொப்புளங்கள் மற்றும் அதிவேக நடன அசைவுகள் (எனது தசைநார் கிழிந்த பிறகு எனது முதல் சவாலான நடன படப்பிடிப்பு).. இவ்வளவு சவால்களுக்குப் பிறகும், கவர்ச்சியாகவும், எளிதாகவும் தோன்றுவதை உறுதி செய்வதே முக்கியம். மோனிகாவுக்கு நான் எனது முழு உழைப்பையும் கொடுத்தேன், திரையரங்குகளில் இதைப் பார்ப்பது ஒரு குதூகலமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். நீங்களும் நடனமாடுங்கள் . இந்த பணியில் எனக்கு துணையாக நின்று, குறிப்பாக நான் விரதம் இருந்த மகா சிவராத்திரி நாளில் எனக்கு ஊக்கமளித்த நடனக் கலைஞர்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டு. நீங்கள் அனைவரும் அற்புதமானவர்கள்” என்று பகிர்ந்துள்ளார். A post shared by Pooja Hegde (@hegdepooja)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன