சினிமா
விமர்சனங்களுக்கு பதிலளித்த வனிதா! Mrs & Mr காப்பியா? நிரூபிச்சா சினிமாவ விட்டே விலகுறேன்

விமர்சனங்களுக்கு பதிலளித்த வனிதா! Mrs & Mr காப்பியா? நிரூபிச்சா சினிமாவ விட்டே விலகுறேன்
தமிழ் சினிமாவில் எப்போதுமே விவாதங்கள், சர்ச்சைகள், அதிரடியான பதில்களை ஏந்திக்கொண்டு வருபவர் வனிதா விஜயகுமார். இப்போது அவர் நடித்த ‘Mrs & Mr’ என்ற திரைப்படம் தியட்டர்களில் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் விமர்சன ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.இந்நிலையில், சில விமர்சகர்களின் விமர்சனங்களை எதிர்த்து, வனிதா ஒரு தீவிரமான பதிலை அளித்துள்ளார். “என் படத்தில் இருக்கும் ஒவ்வொரு காட்சியும் ஒரிஜினல்… யாராவது காப்பி அடித்தீங்கன்னு நிரூபிச்சீங்கன்னா, நான் திரைத்துறையை விட்டே விலகுறேன்..!” என்ற வனிதாவின் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.வனிதா நடித்த ‘Mrs & Mr’ திரைப்படம், ஒரு தம்பதியினரின் உறவிலும், அவர்களது அனுபவங்களிலும் ஏற்படும் மனோதத்துவ குழப்பங்களை அடிப்படையாகக் கொண்டது. வனிதா இப்படத்தின் கதையை எழுதி, அதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.படம் வெளியாகிய பின்னர், சில சமூக ஊடக விமர்சகர்கள் மற்றும் யூடியூப் விமர்சகர்கள், ‘Mrs & Mr’ படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நெகட்டிவாக விமர்சித்தனர். இதற்காகவே வனிதா தற்பொழுது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.