சினிமா
வெளியானது ‘பல்டி’ பட ரிலீஸ் தேதி.! ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு கிடைத்த Gift..!

வெளியானது ‘பல்டி’ பட ரிலீஸ் தேதி.! ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு கிடைத்த Gift..!
மலையாள சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஷேன் நிகாம், புதிய முயற்சியாக வெவ்வேறு கதையம்சத்துடன் உருவாகியுள்ள திரைப்படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார். ‘பல்டி’ எனும் இந்த புதிய திரைப்படம், வரும் ஆகஸ்ட் 29, 2025 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாவதாக படக்குழு தற்பொழுது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதை இயக்கியிருக்கிறார் நவீன தமிழ் சினிமாவின் வித்தியாசமான குரல்களில் ஒருவர் எனக் கூறப்படும் உன்னி சிவலிங்கம். மேலும் நடிகராக மட்டுமல்லாது இயக்குநராகவும் பிரபலமான அல்ஃபோன்ஸ் புத்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.படக்குழுவினரின் அறிவிப்பு மற்றும் வெளியாகியுள்ள புகைப்படங்களைக் காணும்போது, இது ஒரு சமூக வர்க்க வேறுபாடுகளும், இளைஞனின் உணர்வுப் பயணமும் கலந்து உருவாக்கப்பட்ட sentimental drama எனத் தெரிகிறது.