சினிமா
15 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக மாறிய நடிகர் சரவணன்!சட்டமும் நீதியும் வெப் தொடர் ZEE5-இல்.

15 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக மாறிய நடிகர் சரவணன்!சட்டமும் நீதியும் வெப் தொடர் ZEE5-இல்.
15 வருடங்களுக்குப் பிறகு ஹீரோவாக திரும்பிய நடிகர் சரவணன் நடித்துள்ள புதிய வெப் தொடரான ‘சட்டமும் நீதியும்’, ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானதும் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இத்தொடர், சாதாரண நோட்டரி ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, சட்டத்தின் கட்டுப்பாடுகளை மீறி உண்மையான நீதியை எதிர்பார்க்கும் ஒரு மனிதனின் போராட்டத்தை எடுத்துரைக்கிறது. சரவணன் நடித்துள்ள சுந்தரமூர்த்தி என்ற கதாபாத்திரம், நீதிமன்ற வளாகத்திலேயே பணி புரியும் நோட்டரி. அவருக்கு உதவியாளராக நம்ரிதா நடித்துள்ளார்.ஒரு வழக்கறிஞராக வாய்ப்பு தேடி வரும் நம்ரிதாவை பலர் நிராகரிக்க, சாகசமாகும் ஒரு சம்பவம் கதையின் திருப்புமுனையாக அமைகிறது. குப்புசாமி என்ற முதியவர் தனது மகள் வெண்ணிலா காணாமல் போன வழக்கில் போலீசாரின் அலட்சியத்தால் தீக்குளிக்கிறார். அந்த வழக்கை எடுத்துக் கொள்கிறார் சுந்தரமூர்த்தி.வழக்கை விசாரிக்கும் போதே, குப்புசாமி 40 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அவரது மகள் 20 வருடங்களுக்கு முன்பே காணாமல் போய்யுள்ளார் என்பதும் தெரியவருகிறது. இந்த உண்மை வெளிவருவது, தொடரின் முக்கிய காட்சிகளில் ஒன்றாகும்.சட்டம், நீதியை ஒரு சாமானியனின் பார்வையில் இயக்குனர் அணுகிய விதம், ரசிகர்களிடையே நன்றியுணர்வை ஏற்படுத்தியுள்ளது. சரவணனின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும், மற்ற கதாபாத்திரங்கள் அதிக வளர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.