உலகம்
81 ஆப்கானியர்களை நாடு கடத்தும் ஜெர்மனி

81 ஆப்கானியர்களை நாடு கடத்தும் ஜெர்மனி
ஆப்கானிஸ்தானில் 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் இருந்து பலரும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.
இவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப பல நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களில் 81 பேரை ஜெர்மனி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்பு, அகதிகள் விண்ணப்பம் நிராகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 81 பேரும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
2021ம் ஆண்டு முதல் தற்போதுவரை ஜெர்மனியில் இருந்து 2 விமானங்கள் மூலம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் அகதிகளாக உள்ள நிலையில அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஜெர்மனி அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை