சினிமா
TRP-யில் கயல் சீரியலுக்கு தண்ணிக்காட்டிய எதிர்நீச்சல்!! நம்பர் 1 சீரியல் இதுதானாம்..

TRP-யில் கயல் சீரியலுக்கு தண்ணிக்காட்டிய எதிர்நீச்சல்!! நம்பர் 1 சீரியல் இதுதானாம்..
திரைப்படங்களை மக்கள் மத்தியில் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் மிகப்பெரிய ஆதரவை பெறும்.இதில் வீட்டில் இருக்கும் பெரும்பாலானோர் சீரியல்களை பார்க்க அடிமையாகிவிடுவார்கள் சினிமாவின் வெற்றி – தோல்விகளை தீர்மானிக்க பாக்ஸ் ஆபிஸ் எப்படி இருக்கிறதோ அதோபோல் சின்னத்திரை சீரியல்கள் தோல்வி – வெற்றியை பார்க்க டிஆர்பி ரேட்டிங் மிகமுக்கிய பங்கினை பெற்று அதை தீர்மானிக்கிறது.அந்தவகையில் ஒவ்வொரு வாரமும் சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் வெளியாகும். 2025 ஆம் ஆண்டின் 27வது வார நிலவரப்படி, எந்த சீரியல் டாப்பில் இருக்கிறது என்ற லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.இதில், முதல் இரு இடங்களில் சன் டிவி சீரியல்கள் இடம்பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் 9.73 புள்ளிகளுடன் சிங்கப்பெண்ணே சீரியல் பிடித்துள்ளது. 9.35 புள்ளிகள் பெற்று மூன்று முடிச்சு சீரியல் இரண்டாம் இடத்தினை பிடித்திருக்கிறது.சில வாரங்களாக பின் தங்கியிருந்த எதிர்நீச்சல் 2 சீரியல் 8.36 புள்ளிகள் பெற்று கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தினை பிடித்திருக்கிறது. 3வது இடத்தில் இருந்த கயல் சீரியல் 8.31 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.6வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 8.23 புள்ளிகள் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.சன் டிவியின் மருமகள் சீரியல் 8.6 புள்ளிகள் பெற்று 6வது இடத்திற்கும், 7.45 புள்ளிகள் பெற்ற விஜய் டிவியின் ஐய்யனார் துணை சீரியல் 7வது இடத்திற்கும் சென்றுள்ளது.சன் டிவியின் அன்னம் சீரியல் 6.52 புள்ளிகள் பெற்று 8வது இடத்திற்கும், விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் 5.50 புள்ளிகள் பெற்று 10வது இடத்தினை பெற்று முன்னேறியிருக்கிறது.இந்த வாரமும் சன் டிவியின் பல சீரியல்கள் டாப் 10க்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.