Connect with us

சினிமா

அப்பாவின் ஆதரவால் எழுந்த ஓர் வெற்றிப் பயணம்..!நமிதா மாரிமுத்துவின் உருக்கமான பேட்டி..!

Published

on

Loading

அப்பாவின் ஆதரவால் எழுந்த ஓர் வெற்றிப் பயணம்..!நமிதா மாரிமுத்துவின் உருக்கமான பேட்டி..!

நமிதா மாரிமுத்துவின் வாழ்க்கையைப் பற்றிய உண்மையான உணர்வுகளை, அவருடைய தந்தையுடன் பகிர்ந்த எடுத்துக்காட்டாகத்தான் தெரிகிறது. இதில் பல பரிமாணங்கள் உள்ளன. குடும்ப பாசம், தந்தையின் அளவில்லாத ஆதரவு, சமூக எதிர்ப்புகளைத் தாண்டிய ஒரு டிரான்ஸ்ஜென்டர் பெண்ணின் பயணம் குறித்த நேர்காணலில்  கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று  வருகின்றது.நமிதா திருநங்கை ஆவது என  ஒரு முடிவாக இருந்ததோடு, அந்த பயணத்துக்குள் நுழைவதற்கான போராட்டமாகவும் இருந்தது. அது குடும்பத்தினரிடையிலேயே ஆரம்பமானது. ஆனால் அப்பா மட்டும் தொடக்கத்திலிருந்து இறுதி வரைக்கும் துணையாக இருந்தது ஒரு மிக முக்கியமான விஷயம். எனக் கூறியிருந்தார்.   மேலும் கூறும் போது “தந்தையின் இறுதி சடங்குகளில் பங்கேற்பதற்கான உரிமை கூட ஒரு டிரான்ஸ்ஜென்டர்  பெண்ணுக்கு மறுக்கப்படும் சூழ்நிலையை நமிதா சந்திக்க நேரிட்டது. ஆனால் தனது உரிமையை நிலைநாட்டி, அந்த கடமையை நிறைவேற்றிய ஒரு மகளாக நமிதா உருவெடுத்திருப்பது ஒரு நம்பிக்கையையும் தருகிறது.தனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில், முதலாவது ஸ்கூட்டி ஸ்ட்ரீக், பிறகு கார் வாங்கி கொடுத்தது, அதற்குபிறகு புது வீடு அமைத்துக் கொடுத்தது என, நமிதாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றிப் பின்னணியிலும் அவருடைய அப்பாவே காரணம் என்று அவர் பெருமையாக கூறுகிறார். “அவரை பிளைட்ல, கப்பல்ல கூட்டி போனேன். அது அவருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்த நினைவுகள் மட்டும் தான் என் வாழ்க்கையை முன்னோக்கி இழுத்துக்கொண்டு போய்கிட்டு இருக்கு.” என்று கூறியிருந்தார். ஒரு பிள்ளை அப்பாவுக்கு கடைசில பண்ண வேண்டிய கடமையை நான் பண்ணினேன். அது எனக்கு ஒரு புனிதமான நிறைவு. அந்த சப்போர்ட் சிஸ்டமா இருந்தது நால தான் நான் இன்று நமிதா மாரிமுத்து “எனக் கூறியிருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன