இந்தியா
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!

இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!
பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களுக்கான வான்வெளி மூடலை ஆகஸ்ட் 24 வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் எந்த விமானங்களும், இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட இராணுவ மற்றும் சிவிலியன் விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது NOTAM வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி ஆகஸ்ட் 24 காலை 5:19 மணி வரை (இந்திய நேரப்படி) இந்தத் தடை அமலில் இருக்கும் என்று PAA தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை