சினிமா
வில்லனிலிருந்து மீண்டும் ஹீரோவாக அர்ஜுன்…!வெளியான முக்கிய தகவல் இதோ..!

வில்லனிலிருந்து மீண்டும் ஹீரோவாக அர்ஜுன்…!வெளியான முக்கிய தகவல் இதோ..!
பல வெற்றிப் படங்களில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் மின்னியுள்ள ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், தற்போது மறுபடியும் ஹீரோ அவதாரத்தில் திரையிலக்கு வருகிறார். AGS நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அர்ஜுன், நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் உதவியாளராக பணியாற்றிய சுபாஷ் இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த திரைப்படத்தின் முக்கியத்துவம் காதல் கதை அல்ல என்பதும் இதில் அப்பா-மகள் உறவை மையமாகக் கொண்டு சென்டிமென்ட் கலந்த குடும்பக் கதையாக சொல்லப்படுகிறது. அர்ஜுனின் மகளாக, பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இவர் ‘ஸ்டார்’ மற்றும் ‘கண்ணப்பா’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக ‘விருமாண்டி’ புகழ் அபிராமி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த அபிராமி, சில வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது thug life திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைவது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு, இசை மற்றும் டீசர் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.