Connect with us

தொழில்நுட்பம்

6 நிமிடங்களுக்கும் மேல் நீடிக்கும் சூரிய கிரகணம்: ஒரு நூற்றாண்டு அதிசயம்! எப்போது தெரியுமா?

Published

on

Solar eclipse

Loading

6 நிமிடங்களுக்கும் மேல் நீடிக்கும் சூரிய கிரகணம்: ஒரு நூற்றாண்டு அதிசயம்! எப்போது தெரியுமா?

2027 ஆகஸ்ட் 2-ம் தேதி ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் வானில் ஒரு சிறப்பான நிகழ்வு நடக்கப்போகிறது. இது சாதாரண கிரகணம் இல்லை; 6 நிமிடங்கள் 23 வினாடிகள் வரை நீடிக்கும் இந்த முழு சூரிய கிரகணம், இந்நூற்றாண்டின் மிக முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.பொதுவாகவே முழு சூரிய கிரகணங்கள் கண்கவர்ந்தவைதான். ஆனால், 2027 ஆகஸ்ட் நிகழ்வு அதன் அசாதாரண நீண்ட நேரம் காரணமாகத் தனித்து நிற்கும். பெரும்பாலான முழு கிரகணங்கள் சூரியனின் கரோனாவை (சூரியனின் வெளிப்புற அடுக்கை) ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே காணப்படும். ஆனால், Space.com தகவல்படி, வரவிருக்கும் இந்த கிரகணம் இந்த வழக்கத்தை மாற்றி, 1991 மற்றும் 2114 ஆண்டுகளுக்கு இடையில் நிலப்பரப்பில் இருந்து பார்க்கக்கூடிய மிக நீண்ட முழு சூரிய கிரகணமாக அமையப் போகுகிறது. இந்த நீண்ட இருண்ட நேரம், இந்த கிரகணப் பாதையில் இருக்குறவர்களுக்கு, ஒரு அரிய வானியல் அவதானிப்புக்கும், மறக்க முடியாத அனுபவத்திற்கும் வழிவகுக்கும்.இந்த கிரகணம் இவ்வளவு நேரம் நீடிக்க என்ன காரணம்? இது சில அரிய வானியல் அம்சங்கள் ஒன்னு சேருவதால்தான். 2027 ஆகஸ்ட் 2-ம் தேதி, பூமி சூரியனில் இருந்து மிகத் தொலைவில் உள்ள அப்ஹீலியன் (aphelion) நிலையில இருக்கும். இதனால சூரியன் வானத்தில் சிறிதளவு தெரியும். அதே சமயம், சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள பெரிகீ (perigee) நிலையில இருக்கும். இதனால சந்திரன் பெரியதாக தெரியும். சூரியன் சிறிதாகவும் சந்திரன் பெரியதாகவும் தோன்றுவதால், கிரகணம் நீண்ட நேரம் நீடிக்கிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇந்த அரிய சேர்க்கைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, கிரகணத்தின் பாதை பூமத்திய ரேகைக்கு (equator) அருகில் செல்லும். குறைந்த அட்சரேகைகளில் சந்திரனின் நிழல் பூமியின் மேற்பரப்பில் மெதுவா நகரும். இந்த குறைந்த வேகம் சந்திரனின் முழு நிழலின்கீழ் செலவழிக்கும் நேரத்தை அதிகரித்து, கிரகணத்தின் மொத்த கால அளவை நீடிக்குது.இந்த கிரகணம் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேல் தொடங்கி, 258 கி.மீ. அகலமான நிழலை கிழக்கு நோக்கி பரப்பும். Space.com தகவல்படி, கிரகணத்தின் முழுமையான பாதை பல்வேறு பகுதிகளான ஸ்பெயின், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, மத்திய எகிப்து, சூடான், ஏமன், சவுதி அரேபியா மற்றும் சோமாலியா வழியாகச் செல்லும். கடைசியாக, இந்த கிரகணம் சாகோஸ் தீவுக்கூட்டத்தைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் வெளியேறும். இந்த கண்கவர் காட்சியைக் காண திட்டமிடுறவங்களுக்கு, வழக்கமா தெளிவான மற்றும் வறண்ட ஆகஸ்ட் வானிலைக்குப் பெயர் பெற்ற லிபியா மற்றும் எகிப்து போன்ற பகுதிகள் சிறந்த இடங்களாக இருக்கும்.கிரகணப் பாதையில் இருக்கும் மக்களுக்கும், பயணிகளுக்கும், 2027 ஆகஸ்ட் 2 முழு சூரிய கிரகணம் வெறும் ஒரு வானியல் நிகழ்வு மட்டுமல்ல; இது அரிய அனுபவம். அதன் தனித்துவமான கால அளவு மற்றும் அதற்கு வழிவகுக்கும் காரணிகள் இதை ஒருபோதும் தவறவிட முடியாத ஒரு வாய்ப்பா மாற்றும். நீங்க தீவிர வானியல் ஆர்வலரா இருந்தாலும் சரி, இல்லனா வானத்தைப் பார்க்க விரும்பும் நபராக இருந்தாலும் சரி, உங்க நாட்காட்டியில் 2027 ஆகஸ்ட் 2 தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள். இந்த நாளில், உலகம் ஒரு கணம் இருண்டு, ஒரு முழு சூரிய கிரகணத்தின் மூச்சடைக்கக் கூடிய அழகை வெளிப்படுத்தும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன