இலங்கை
மீனவரை கடித்த முதலை ; அச்சத்தில் கந்தளாய் மக்கள்!

மீனவரை கடித்த முதலை ; அச்சத்தில் கந்தளாய் மக்கள்!
திருகோணமலை -கந்தளாய் பகுதியில் உள்ள ஜனரஜ்ஜன குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரொருவர் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
முதலைக்கடிக்குள்ளான மீனவர் கந்தளாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மூதூர் -ஆசாத் நகரைச் சேர்ந்த 47 வயதுடைய எஜ்.டி.மர்சூக் என்பவரே காயமடைந்துள்ளார்.
குறித்த நபர் வழமையாக இக்குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர் என்பதோடு சம்பவ தினமும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் ஜனரஜ்ஜன குளத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.