இலங்கை

மீனவரை கடித்த முதலை ; அச்சத்தில் கந்தளாய் மக்கள்!

Published

on

மீனவரை கடித்த முதலை ; அச்சத்தில் கந்தளாய் மக்கள்!

திருகோணமலை -கந்தளாய் பகுதியில் உள்ள ஜனரஜ்ஜன குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரொருவர் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

முதலைக்கடிக்குள்ளான மீனவர் கந்தளாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில்  மூதூர் -ஆசாத் நகரைச் சேர்ந்த  47 வயதுடைய  எஜ்.டி.மர்சூக் என்பவரே காயமடைந்துள்ளார். 

குறித்த நபர் வழமையாக இக்குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர் என்பதோடு சம்பவ தினமும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

கந்தளாய் ஜனரஜ்ஜன குளத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version