உலகம்
காப்புறுதி பணத்திற்காக கால்களை துண்டித்து கொண்ட மருத்துவர்

காப்புறுதி பணத்திற்காக கால்களை துண்டித்து கொண்ட மருத்துவர்
5 லட்சம் பவுண்டுகள் பெறுவதற்காக மருத்துவர் ஒருவர் தனது முழங்காலுக்கு கீழ் உள்ள இரண்டு கால்களையும் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீல் ஹாப்பர் என்ற அந்த மருத்துவர் காப்புறுதி பணம் பெறும் நோக்கில் கால்களை அகற்றியுள்ளதாக காப்பீடு நிறுவனங்கள் குற்றம் சாட்டி நீதிமன்றத்தை நாடியுள்ளன. முழங்கால்களை பாதுகாப்பாக அகற்றுவது எப்படி என்பது தொடர்பான வீடியோக்களை வெப்சைட்டில் இருந்து நீல் ஹாப்பர் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நீல் ஹாப்பர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்புறுதி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கால்கள் அகற்றப்படுவது தொடர்பான வீடியோக்களை நீல்ஹாப்பர் ஒரு வலைத்தளத்திலிருந்து வாங்கியது தெரியவந்துள்ளது.
காப்புறுதி நிறுவனம் அளித்த புகாரில், நீல் ஹாப்பர் தனக்கு ரத்த நாளப் பிரச்சினை உள்ளது என்றும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால் அது உடல் முழுவதும் பரவும் என்று தங்களை நம்ப வைக்க முயன்றதாக புகாரில் தெரிவித்துள்ளன.
காப்புறுதி பணத்துக்காக மருத்துவர் ஒருவர் தனது இரண்டு கால்களையும் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை