Connect with us

இலங்கை

நாட்டில் சில மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

Published

on

Loading

நாட்டில் சில மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

நாடு முழுவதும் 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், இந்த மருந்தகங்கள் தேவையான தரநிலைகளைப் பேணாத காரணத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

Advertisement

இந்தநிலையில், நடப்பு ஆண்டின் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 18 திகதி வரை, தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு 2,039 உரிமப் புதுப்பிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

இவற்றில் 1,820 மருந்தகங்களுக்கு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், 219 மருந்தகங்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இவற்றில் 137 மருந்தகங்களில் முழுநேர மருந்தாளுநர்கள் நியமிக்கப்படாததால், அவர்கள் நியமிக்கப்படும் வரை உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன