இந்தியா
மீனவ கிராமங்களின் பொதுச் சொத்துக்களை முழுமையாக பதிவு செய்க: புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

மீனவ கிராமங்களின் பொதுச் சொத்துக்களை முழுமையாக பதிவு செய்க: புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!
கடற்கரை மேலாணமை திட்டத்தில் 570 ஏக்கர் பொது சொத்து நிலத்தை முழுமையாக பதிவு செய்ய கோரி புதுச்சேரி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மற்றும் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி, இணைந்து கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் மீனவ கிராமங்களின் பொது சொத்துகளை பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர் செல்வன் தலைமை வகித்தார்.மார்க்சிஸ்டு மாநில செயலர் ராமசந்திரன் தொடக்கவுரையாற்றினார். திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா துணை அமைப்பாளர் வி.அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், விசிக மாநில முதன்மை செயலர் தேவ பொழிலன், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டோர் புதுச்சேரி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். புதுச்சேரிக்கான வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தில் பதிவு செய்யப்படாமல் திட்டமிட்டு தவிர்கக்ப்பட்ட 551.2 ஏக்கர் மீனவர் கிராமங்களின் பொது சொத்துகளை உடனடியாக வரைவு திட்டத்தில் பதிவு செய்யவேண்டும். காரைக்காலில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்ட 175.04 ஏக்கர் மீனவர் கிராம பொதுச்சொத்துகளையும் சேர்க்க வேண்டும்.அதேபோல் திட்டமிட்டு தவிர்த்துள்ள புதுச்சேரியில் 471.49 சதுர கடல் மைல்களையும், காரைக்காலில்139.16 சதுர கடல் மைல்களையும் மீன்பிடி பகுதிகளாக வரைவு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். கடல் மற்றும் கடற்கரை வளங்களை பாதுகாக்கும் வகையில் கடல் மற்றும் கடற்கரை மீதான மீனவர்களின் பாரம்பரிய முற்றுரிமையை பாதுகாக்கு உறுதிப்படுத்தும் வகையில் கடல் பாதுகாப்பு சட்டம் உடனடியாக நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.