இலங்கை
இளைஞர்களால் அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; விசாரணைகளில் வெளிவந்த பகீர் தகவல்

இளைஞர்களால் அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; விசாரணைகளில் வெளிவந்த பகீர் தகவல்
ஹோமாகம பொலிஸ் பிரிவில் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து கிளை வீதியில் வீசிய குற்றத்தில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி நடந்த இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து, நேற்றிரவு (25) மாதம்பிட்டிய மற்றும் கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கொழும்பு 14 மற்றும் 15 பகுதிகளைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 18 முதல் 24 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தற்போது ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் பயணித்த கார் கேகாலை-மாவனெல்ல வீதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.