இலங்கை
கிளிநொச்சி வைத்தியசாலையின் மின்தூக்கி இயங்காததால் கடும் சிரமத்துக்குள்ளாகிய நோயாளர்கள்

கிளிநொச்சி வைத்தியசாலையின் மின்தூக்கி இயங்காததால் கடும் சிரமத்துக்குள்ளாகிய நோயாளர்கள்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பயன்பாட்டில் இருந்து வந்த மின் தூக்கி கடந்த நான்கு நாட்களாக செயலிழந்த நிலையில் நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
சத்திர சிசிக்சை கூடம், அவசர சிகிச்சை, உள்ளிட்டவற்றுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்வது, சிகிச்சை நிறைவுற்றதும் விடுதிகளுக்கு மீளவும் அழைத்து வருவது போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்ட மின் தூக்கியே செயலிழந்துள்ளது.
இதனால் ஊழியர்களை நோயாளிகளை படிகட்டு வழியாக சுமந்து செல்வதும் சிகிச்சை நிறைவுற்றதும் அங்கிருந்து மீளவும் சுமந்து செல்வதும் என ஊழியர்களும் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.
அத்தோடு ஆபத்தான சத்திர சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள், மற்றும் நடமாட முடியாத நோயாளிகள் என பலரும் இதனால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
மாவட்ட வைத்தியசாலையில் ஒரேயொரு மின்தூக்கியே பயன்பாட்டில் இருப்பது பலரிடமும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது திருத்தும்பணிகள் மேற்கொள்வதாக குறிப்பிட்டனர்.