இலங்கை
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி தமிழர் தாயகம் எங்கும் போராட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி தமிழர் தாயகம் எங்கும் போராட்டம்!
வடக்கு, கிழக்கில் இன்று எழுச்சியுடன் இடம்பெறும் போராட்டம்!
வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
வடகிழக்கு பகுதியில் எட்டு மாவட்டங்களிலும் குறித்த போராட்டம் இடம்பெற்றதுடன் திருகோணமலையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும், சர்வதேசப் பொறிமுறை தேவை எனப் பல வாசகங்களை ஏந்தியிருந்தனர்.
அதேவேளை முல்லித்தீவில் முன்னெடுக்கபப்ட்ட போராட்டத்தில் ,நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் லோகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜுட்சன், வடக்கு,கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி லவகுசராசா,
மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.