Connect with us

சினிமா

சிலுக்கு மாதிரி வர நினைத்த இலக்கியாவிற்கு நடந்த விபரீதம்.! அந்தணனின் அதிரடி கருத்து!

Published

on

Loading

சிலுக்கு மாதிரி வர நினைத்த இலக்கியாவிற்கு நடந்த விபரீதம்.! அந்தணனின் அதிரடி கருத்து!

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமான சமூக வலைத்தள முகம் இலக்கியா, நேற்றைய தினம் அழகிற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தை அதிக அளவில் எடுத்துக்கொண்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இணைய விமர்சகராக விளங்கும் வலைப்பேச்சு அந்தணன், இந்த விவகாரம் குறித்து முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.இலக்கியா, சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர். அவருடைய டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்கள், குறிப்பாக கவர்ச்சியாக நடனமாடும்  காணொளிகள், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. சிலருக்கு அவர் ஒரு மாடலாக விளங்கியிருந்தார்.அந்தவகையில் இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து வலைப்பேச்சு யூடியூபர் அந்தணன் தற்பொழுது சில சுவாரஸ்யமான கருத்துகளை தெரிவித்துள்ளார். “இலக்கியா போடுற டிக்டாக் வீடியோக்களுக்கு ரசிகர்கள் இருக்காங்க. ஆனா அது ஒருவரை திரையுலகத்துக்கு கொண்டு வந்துடுமா? என்றால் கிடையாது. அவ்வளவு ஈஸியாக சினிமா கிடைக்காது. அழகும், வனப்பும் மட்டும் இருந்தா போதாது.”என்றார் அந்தணன். அதாவது, இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் புகழையும், சமூக ஊடக வரவேற்பையும் கொண்டு திரையுலக வாய்ப்பை பெற முயற்சி செய்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியடைந்ததாகவும், ஜெய் மாலினி அல்லது சிலுக்கு மாதிரி ஓர் அடையாளத்தை அவர் உருவாக்க நினைத்தாலும் அவருக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அந்தணன் தெரிவித்தார்.நேற்றைய தினம், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில் இலக்கியா, நடன இயக்குநரான திலீப்புடன் தான் தொடர்பில் இருந்ததாகவும், அவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்த பதிவு, அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், இரங்கலையும் ஏற்படுத்தியது. இலக்கியா தனது உருக்கமான பதிவுகள் மூலம் திலீப்பை குற்றம் சாட்டினார் என்றாலும், தற்போது சமூக ஊடகங்களில் அவர் கூறியது உண்மையா? இல்லையா? என்பது பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன என்றார் அந்தணன். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன