சினிமா
தேசிய விருது நடிகை!! பாலியல் வழக்கில் சிக்கி நாசமான வாழ்க்கை? யார் அது…

தேசிய விருது நடிகை!! பாலியல் வழக்கில் சிக்கி நாசமான வாழ்க்கை? யார் அது…
குழந்தை பருவத்தில் இருந்து சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தினை பிடித்த நடிகை, அப்போதே முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்தார். தேசிய விருதையும் வாங்கிய அந்த நடிகை, ஒரு சம்பவத்தால் அவரது மொத்த வாழ்க்கையையும் மாற்றியது. அந்த நடிகை யார் என்று பார்ப்போம்..பீகார் மாநிலத்தில் இருந்து வந்த நடிகை ஸ்வேதா பாசு பிரசாத் தான் அந்த நடிகை. 2002ல் இந்தியில் வெளியான மட்கே என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக் நடித்தார். இதில் இரட்டை வேடத்தில் ஸ்வேதா நடித்திருந்தார்.அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்று சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதன்பின் இக்பால் என்ற படத்தில் நாயகியாக நடித்து, டர்னா ஜரூரி ஹை என்ற படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது.இதனை தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்து அங்குள்ள முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்த வெற்றிப்படங்களை ஸ்வேதா தெலுங்கு சினிமாவில் கொடுத்தப்போது ஒருசில படங்களின் தோல்விகளானது.அதோடு ஒரு சம்பவம் அவர் வாழ்க்கையில் நடந்தது. கடந்த் 2014ல் ஹைதராபாத்தில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நடிகை ஸ்வேதா பாசு சிக்கினார். பாலியல் தொழில் செய்வதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு ஸ்வேதா கைது செய்யப்பட்டார். அதனால் ஒட்டுமொத்த திரையுலகையும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவை அனைத்தும் பொய் என்று குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஸ்வேதா, சில மாதங்களுக்கு பின் குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியே வந்தார்.இதனையடுத்து தயாரிப்பாளர் ரோஹித் மிட்டல் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், 9 ஆண்டுகளுக்கு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தப்பின் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.2022ல் இந்தியா லாக்டவுன் என்ற ஓடிடி தள படத்தில் நடித்து ஓடிடி நட்சத்திரமாக மாறினார். தற்போது பல கோடிகளில் சம்பளம் வாங்கும் ஸ்வேதா பாசு பிரசாத், நடிப்பில் Criminal Justice என்ற ஓடிடி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.