பொழுதுபோக்கு
மலையாளத்தில் வர வேண்டிய படம்; தமிழில் எடுக்கப்பட்டது யாருக்காக? வடிவேலு கொடுத்த சூப்பர் அப்டேட்!

மலையாளத்தில் வர வேண்டிய படம்; தமிழில் எடுக்கப்பட்டது யாருக்காக? வடிவேலு கொடுத்த சூப்பர் அப்டேட்!
மாமன்னன் படத்திற்கு பிறகு நடிகர் வடிவேலு – பஹத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் மாரீசன். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (ஜூலை 25) வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த கதையில் தான் நடித்தது எப்படி என்பது குறித்து வடிவேலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. தனது நடிப்பு, உடல்மொழி என அனைத்திலும் மற்ற நடிகர்களை விட வித்தியாசம் காட்டி நடித்து மக்களை கவர்ந்த இவர், சமீபகாலமாக, குணச்சித்திர கேரக்டரில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் இவர் முக்கிய கேரக்டரில் உதயநிதியின் அப்பாவாக நடித்த மாமன்னன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் பஹத் பாசில் வில்லனாக நடிததிருந்தார்.இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, வடிவேலு நடித்த படம் தான் மாரீசன். இந்த படத்தில் கமிட் ஆனது குறித்து பேசியுள்ள நடிகர் வடிவேலு, டூரிங் சினிமா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்த கதையை முதலில் கேட்டபோது, எனக்கு புரியவே இல்லை. ஆனால் கதை சூப்பராக இருந்தது. அதனால் மீண்டும் மீண்டும் அவரை சொல்ல சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் கதை பிடித்துபோக, மற்றொரு கேரக்டரில் யார் நடிக்கிறார் என்று கேட்டேன்.மற்றொரு கேரக்டரில் நடிப்பவர் பெயர் சஸ்பென்ஸ் இன்னும் 2 நாட்களில் தெரியவரும் என்று கதாசிரியர் சொன்னார். அதன்பிறகு, 2 நாட்கள் கழித்து மீண்டும் மீட் பண்ணும்போது பஹத் பாசில் இந்த கேரக்டரில் நடிப்பதாக சொன்னார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சூப்பர் குட் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக சொன்னார், படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மாமன்னன் படத்தின்போதே பஹத் பாசில் என்னிடம் நெருக்கமாக பழகினார். அதே நெருக்கம் இந்த படத்திலும் தொடர்ந்தது.வடிவேலு எப்படி நடிக்கிறார் என்று பாருடா என பஹத் பாசிலின் அப்பா அவரிடம் பலமுறை சொல்லியுள்ளார். வீ்ட்டில் இருக்கும்போதெல்லாம் அப்படி சொல்வராம். 12-ம் வகுப்பு படிக்கும்போதில் இருந்து பஹத் எனது ரசிகனாக இருந்திருக்கிறார். இந்த படத்தில் அவர் தான் ஹீரோ என்று வடிவேலு சொல்ல, நீங்கள் தான் ஹீரோ என்று பஹத் பாசில் சார் சொன்னார் என்று தொகுப்பாளினி சொல்கிறார். இதை கேட்ட வடிவேலு, ஒரு கை இருந்தால் ஓசை வராது. இரு கையும் தட்டினால் தான் ஓசை வரும். அதனால் இந்த படத்திற்கு இருவரும் முக்கியம் என்று கூறியள்ளார்.அதேபோல் இந்த படத்தின் கதையை கேட்ட பஹத் பாசில், இதில் வடிவேலு மாதிரி ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் வடிவேலுவே நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து தான் வடிவேலுவை கமிட் செய்துள்ளனர். முதலில் மலையாளத்தில் எடுக்க இருந்த இந்த படம் வடிவேலுவுக்காக தமிழில் எடுக்கப்பட்டது என்று பஹத் பாசில் கூறியதாக இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கூறியுள்ளார்.