இலங்கை
மோசடியில் ஈடுபட்ட அமைச்சர்கள் – நீதிமன்ற உத்தரவு!

மோசடியில் ஈடுபட்ட அமைச்சர்கள் – நீதிமன்ற உத்தரவு!
போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை குத்தகை அடிப்படையில் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவலை மேயர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடமேவாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மோசடி விசாரணை பணியகத்திற்கு கல்கிஸ்ஸை நீதிவான் ஏ.டி. சத்துரிகா டி சில்வா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணவர்தன, இந்த வழக்குடன் தொடர்புடைய 35 ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிலாபம் நீதிவான் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவின் வீட்டிற்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக சிலாபம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று அழைக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததே இதற்குக் காரணம்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் கூறியுள்ளார்.