Connect with us

தொழில்நுட்பம்

யு.பி.ஐ.யில் புதிய மாற்றங்கள்: ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் புதிய விதிமுறைகள்!

Published

on

UPI guidelines

Loading

யு.பி.ஐ.யில் புதிய மாற்றங்கள்: ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் புதிய விதிமுறைகள்!

தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அமைப்பில் புதிய விதிமுறைகளை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள், அனைத்து வங்கிகள் மற்றும் கட்டண செயலிகளுக்கான (payment apps) API (Application Programming Interface) பயன்பாட்டு விதிகள், ஆட்டோபே (AutoPay), கணக்கு இருப்பு சரிபார்ப்பு (account balance check) ஆகியவற்றில் மாற்றங்களை உள்ளடக்கி உள்ளன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கயு.பி.ஐ. பயனர்கள் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே தங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்க முடியும். உச்சகட்ட நேரங்களில் யு.பி.ஐ. சேவையை மேலும் நம்பகமானதாகவும், தடையற்றதாகவும் மாற்றும் நோக்கத்திலே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளதாக NPCI தெரிவித்துள்ளது. இதன்மூலம், அக்கவுண்ட் பேலன்ஸ் சரிபார்ப்பினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, ஒட்டுமொத்த யு.பி.ஐ. சேவையின் செயல்திறனை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.யு.பி.ஐ. ஆட்டோபே பரிவர்த்தனைகளுக்காக NPCI குறிப்பிட்ட நேர ஸ்லாட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல், ஆட்டோபே பரிவர்த்தனைகள் நாள் முழுவதும் எந்நேரத்திலும் நடைபெறுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயலாக்கப்படும். மாதாந்திர சந்தாக்கள், பயன்பாட்டு பில்கள் (utility bills) அல்லது EMI போன்ற திட்டமிடப்பட்ட கட்டணங்கள் இதில் அடங்கும். இந்த மாற்றம் பயனர்களுக்கு நேரடியாகத் தெரியாது என்றாலும், இது யு.பி.ஐ. தளத்தை வேகமாக செயல்படவைத்து, நாள் முழுவதும் ஏற்படும் நெரிசலைக் குறைக்க உதவும். தானியங்கி யு.பி.ஐ. வசூலை நம்பியுள்ள வணிகங்கள் தங்கள் அட்டவணையை சரிசெய்ய வேண்டியிருக்கலாம். சந்தா செலுத்துபவர்கள் (அ) மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது; அவர்கள் வழக்கம் போல் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும்.இந்த புதிய கட்டுப்பாடுகள், யுபிஐயை எவ்வளவு அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்து தளங்களில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், அக்கவுண்ட் பேலன்ஸ் அடிக்கடி சரிபார்க்காத அல்லது கட்டண நிலையைப் புதுப்பிக்காத பயனர்கள் பெரிய வித்தியாசத்தை கவனிக்க மாட்டார்கள். இந்த அப்டேட்டின் முக்கிய இலக்கு, அடிக்கடி யு.பி.ஐ.யைப் பயன்படுத்தி கணினிக்கு அதிக சுமையை உருவாக்கும் பயனர்கள் ஆவர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன