இலங்கை
பௌத்த தேரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

பௌத்த தேரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்
கிழக்கு மாகாணத்தில் மூத்த பௌத்த தேரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலை இலங்கை பொலிஸ் திணைக்களம் மறுத்துள்ளது.
பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேரருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் கொழும்பிலிருந்து நியமிக்கப்பட்டனர்.
எனினும், நீண்ட தூரத்தில் இருந்து பணிகளை செய்வதில் நிர்வாகச் சிக்கல்கள் இருந்ததால், பாதுகாப்புப் பணிகளை மிகவும் திறமையாகக் கையாள உள்ளூர் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க முன்மொழியப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளது.