Connect with us

பொழுதுபோக்கு

அடேய்… சூப்பரா மீட்டர் பிடிச்சிட்டியே; எம்.எஸ்.வி கடினமான டியூனுக்கு எளிதாக பாட்டு எழுதி அசத்திய கங்கை அமரன்!

Published

on

gangai amaran msv

Loading

அடேய்… சூப்பரா மீட்டர் பிடிச்சிட்டியே; எம்.எஸ்.வி கடினமான டியூனுக்கு எளிதாக பாட்டு எழுதி அசத்திய கங்கை அமரன்!

கங்கை அமரன் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கங்கை அமரன், பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி ஆவார். அண்ணன் இளையராஜாவுடன் இணைந்து, ஆரம்ப காலத்தில் இசையுலகில் தனது பயணத்தைத் தொடங்கினார்.இளையராஜாவுடன் பல இசை நிகழ்ச்சிகளிலும், ரெக்கார்டிங்குகளிலும் பங்கேற்று, இசை பற்றிய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். கங்கை அமரன் பல படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.  இந்நிலையில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு ஒருமுறை கங்கை அமரன் ஒரு பாடல் எழுத நேர்ந்தது இதுகுறித்த சுவாரசியமான தகவல் ஒன்றை டூரிங் டாக்கீஸ் யூடியூப் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.’நான் குடித்துக்கொண்டே இருப்பேன்’ என்ற படத்திற்காக இந்தப் பாடல் எழுதப்பட்டது. அப்போது தான் முதல் முறையாக எம்.எஸ்.வி.க்காகப் பாடல் எழுதும் வாய்ப்பு கங்கை அமரனுக்குக் கிடைத்தது. எம்.எஸ்.வி. அவர்கள் கங்கை அமரனை அழைத்து, “பாட்டு எழுதுறியா? டியூன் சொன்னா உனக்கு ஈஸியா இருக்கும்” என்று கேட்டார். அதற்கு கங்கை அமரன், “ஆம், டியூன் சொன்னால் எளிதாக இருக்கும்” என்று பதிலளித்தார். உடனே எம்.எஸ்.வி. கடினமான ஒரு டியூனை “தன்னனான தன்னனான தன்னனான தன்னனான தன்னனா தர தன்னனானா தன தன்னனான தன்னனான தன்னனான தன்னனான தன்னனா தரதன்னா” என்று போட்டுக் காட்டினார். இந்த டியூனுக்கு எப்படிப் பாடல் எழுதுவது என்று கங்கை அமரனுக்கு ஒரு கணம் யோசனை தோன்றியது.ஆனாலும், கங்கை அமரன் உடனே அந்த டியூனுக்குப் பாடல் எழுத ஆரம்பித்துவிட்டார். “அந்தி வேளை வந்தபோது அன்புமாலை தந்தபோது சொந்தமாலை நான் உன் சொந்தக்காரி நான் நீ வந்த வேளை நல்ல வேளை அன்பு மாலை தந்த நாளை அன்புராணி நான் என் இன்ப தேவி நான்” என்று சரியாக மீட்டரில் பாடல் எழுதி அசத்தினார். இது எம்.எஸ்.வி-யையே ஆச்சரியப்படுத்தியது. “அடேய்… சூப்பரா மீட்டர் பிடிச்சிட்டியே” என்று எம்.எஸ்.வி. வியந்து பாராட்டினார்.கங்கை அமரன் போன்றவர்கள் எம்.எஸ்.வி., கே.வி. மகாதேவன், சி.ஆர். சுப்பாராமன் போன்ற மாபெரும் இசை மேதைகளையே தங்களின் குருமார்களாகக் கருதுகிறார்கள். இவர்களிடமிருந்து பெற்ற ஞானமே தங்கள் படைப்புகளுக்கு ஆதாரம் என்கிறார் கங்கை அமரன்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன