பொழுதுபோக்கு
ஆக.1 வெளியாகும் ‘ஹவுஸ்மேட்ஸ்’: புதுமைகளை பூர்த்தி செய்யும் என இயக்குநர் ராஜவேல் உறுதி!

ஆக.1 வெளியாகும் ‘ஹவுஸ்மேட்ஸ்’: புதுமைகளை பூர்த்தி செய்யும் என இயக்குநர் ராஜவேல் உறுதி!
இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹவுஸ்மேட்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தர்ஷன், காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் கோவையில் உள்ள பிராட்வே சினிமாவில் திரையிடப்பட்டது. படக்குழுவினர் பார்வையாளர்களுடன் இணைந்து ட்ரெய்லரை கண்டு களித்ததுடன், படம் குறித்த எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து கொண்டனர்.செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ராஜவேல், நடிகர்கள் தர்ஷன், ஆஷா, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர், ‘ஹவுஸ்மேட்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர். ட்ரெய்லரில் பார்த்ததை விட படத்தில் அதிகமான சர்ப்ரைஸ்கள் காத்திருப்பதாகவும், படம் முடிந்த பிறகு “நமது வீட்டிலும் இவ்வாறு நடந்தால் எப்படி இருக்கும்?” என்ற உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படும் என்றும் படக்குழுவினர் கூறினர். தமிழ் சினிமாவுக்கு இந்த படம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.இயக்குநர் ராஜவேல், வணிக ரீதியான படங்களை மட்டுமே எடுத்து வந்தால் நல்ல படங்கள் வராது என்று வலியுறுத்தினார். தற்போது நல்ல கதைகளுக்கு மக்கள் ஆதரவு அளித்து வருவதால், தன்னைப் போன்ற புதுமையான இயக்குநர்கள் கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும்போது பல்வேறு புதுமையான விஷயங்கள் வெளிவரும் என்றும், பார்வையாளர்களின் புதுமையான எதிர்பார்ப்புகளை ‘ஹவுஸ்மேட்ஸ்’ பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறினார். மேலும், காமெடி, ஹாரர், பொழுதுபோக்கு மற்றும் எமோஷன் என அனைத்து அம்சங்களும் இப்படத்தில் நிறைந்திருப்பதாக ராஜவேல் குறிப்பிட்டார்.பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்