பொழுதுபோக்கு
உணர்ச்சிபூர்வமான பயணம்… பாக்கியலட்சுமி சீரியல் முடிவை உறுதி செய்த நடிகை; இன்ஸ்டா பதிவு வைரல்!

உணர்ச்சிபூர்வமான பயணம்… பாக்கியலட்சுமி சீரியல் முடிவை உறுதி செய்த நடிகை; இன்ஸ்டா பதிவு வைரல்!
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பாக்யா கேரக்டரில் நடித்து வரும் நடிகை சுசித்ரா வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கை போராட்டத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைகக்ப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஒருசில முறை கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இந்த சீரியலுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை கொடுக்க தவறியதே இல்லை. குறிப்பாக, பெண்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.அதே சமயம் சமீப காலமாக இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்பதே அனைத்து ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. இந்த கேள்விக்கு விடை சொல்லும் விதமாக, தற்போது பாக்கியலட்சுமி சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்த சீரியல் இதுவரை 1400 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த சீரியலில், நடிகை கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். பழம்பெரும் நடிகை ராஜுயலட்சுமி, நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.இந்த சீரியல் முடிவடைய உள்ள நிலையி்ல, இது குறித்து நடிகை கே.எஸ்.சுசித்ரா தனது நெகிழ்ச்சியான பிரியாவிடைப் பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இறுதி நாள் படப்பிடிப்பின் போது சக நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், , “இது ஒரு முழுமையான பதிவு… பாக்கியலட்சுமியில் நடித்தது சிறந்த நினைவுகளுடன் ஒரு உணர்ச்சிபூர்வமான பயணம். முதுகெலும்பாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. விரைவில் ஒரு புதிய மறுபிரவேசத்துடன் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்,”என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.A post shared by Suchitra Ks (@suchitraks)இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், தொடரின் நினைவுகளை அசைபோட வைத்தது. பாக்கியலட்சுமி வெறும் ஒரு பொழுதுபோக்குத் தொடராக மட்டுமல்லாமல், பெண்கள் அதிகாரம், குடும்ப உறவுகளின் சிக்கல்கள் மற்றும் சுயமரியாதையின் முக்கியத்துவம் போன்ற சமூகப் பிரச்சினைகளை யதார்த்தமாகப் பதிவு செய்தது. இதுவே அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெறக் காரணமாக அமைந்தது. அதேபோல், சுசித்ராவின் சக்திவாய்ந்த நடிப்பு, பாக்கியா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.