சினிமா
பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்ப போவது யார்? – வெளியான அதிரடி அப்டேட்.!

பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்ப போவது யார்? – வெளியான அதிரடி அப்டேட்.!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 2026 ஆம் ஆண்டு பொங்கல் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருவிழாவாக அமையவுள்ளது. காரணம், இளைய தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய தமிழ் திரையுலகத்தின் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் உறுதியாகிக் கொண்டிருக்கின்றன.தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இதை ஹெச். வினோத் இயக்க, தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படம் விஜயின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அரசியலுக்குள் நுழைவதற்கான அடித்தளமாகவே இந்த படத்தை பலரும் கருதுகின்றனர்.‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து, பூஜா ஹெக்டே, பிரியாமணி போன்றவர்கள் நடித்துள்ளனர். ‘ஜனநாயகன்’ படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் ஏற்கனவே படத்திற்கான அடுத்த அப்டேட்டுகளுக்காக காத்திருக்கின்றனர்.இதே நேரத்தில், ரசிகர்களை கொண்டாட வைக்கும் இரண்டாவது முக்கிய படம் தான் ‘சூர்யா 46’. இதை வெங்கி அட்லூரி இயக்குகின்றார். தற்போது சூர்யா நடித்து வரும் இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ இணைந்துள்ளார். இந்த படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறாக இரண்டு படங்களும் 2026 பொங்கல் ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் மோதல் நிகழப்போகிறது என சிலர் எதிர்பார்க்கின்றனர்.