இலங்கை
மசாஜ் நிலையத்தில் இருந்த பெண்ணிடம் பொலிஸ் அதிகாரி செய்த மோசமான செயல்

மசாஜ் நிலையத்தில் இருந்த பெண்ணிடம் பொலிஸ் அதிகாரி செய்த மோசமான செயல்
ஒரு மசாஜ் நிலைய சிகிச்சையாளரான பெண்ணைத் தாக்கி, அவரது பணத்தைக் கொள்ளையடித்து அப்பெண்ணை கடத்தி வாதுவ நகரில் மீண்டும் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
வாதுவ, தல்பிட்டியவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆவார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் 27,000 ரூபாய் பணத்தை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கான்ஸ்டபிளால் தாக்கப்பட்ட சிகிச்சையாளர் பாணந்துறை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.