இலங்கை
வெலிக்கட சிறையில் சோதனை : 6 தொலைபேசிகள் மீட்பு!

வெலிக்கட சிறையில் சோதனை : 6 தொலைபேசிகள் மீட்பு!
வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட அறை பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் ஆறு கைப்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட சோதனையின் போது இந்த சாதனங்கள் மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
அறைகள் பல முன்னாள் அமைச்சர்கள் – மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.