Connect with us

பொழுதுபோக்கு

2 மாதம் சிகிச்சை; என்னிடம் சொல்லாம அவரை விடாதீங்க: ரஜினிகாந்த் அட்மிட் ஆன மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர் வைத்த கட்டளை!

Published

on

MGR Rajinikanth

Loading

2 மாதம் சிகிச்சை; என்னிடம் சொல்லாம அவரை விடாதீங்க: ரஜினிகாந்த் அட்மிட் ஆன மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர் வைத்த கட்டளை!

உடல்நலம் பாதிக்கப்பட்டு தான் மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் தனக்கு போன் செய்து நலம் விசாரித்தாகவும், ட்ரீட்மெண்ட் முடிந்தும்கூட சி.எம்.சொன்னால் தான் உங்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை படங்களில் தொடங்கி தற்போதைய டிஜிட்டல் சினிமாவின் முன்னணி நடிகர்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கததில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்தார்.ஒரு கட்டத்தில் பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரஜினிகாந்த், அதனைத் தொடர்ந்து முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, போக்கிரி ராஜா, பில்லா, மிஸ்டர் பாரத், ப்ரியா என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் ரஜினிகாந்த் வேகமாக வளர்ந்து வந்தாலும் அவருடன் தொடர்ந்து சர்ச்கைள் மற்றும் பொய்யான தகவல்களும் பரவ தொடங்கியது.அந்த வகையில் 1978-ம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, அம்ரீஷ் ஆகியோர் நடிப்பில வெளியான பிரியா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும்போது நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்துள்ளார்.அந்த நேரத்தில் அவரை பிடிக்காதவர்கள், ரஜினிகாந்த் இனி நடிக்க மாட்டார். அவர் பைத்தியம் அவரின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று பரப்ப தொடங்கியுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் இருந்தபோது, நடந்த நிகழ்வுகள் குறித்தும், எம்.ஜி.ஆர் தன்னிடம் நலம் விசாரித்தது குறித்தும் ஒரு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதில், பணம் கொடுத்தே சிவந்த கை எம்.ஜி.ஆர், அவர் எப்போதே எத்தனை பேருக்கு உதவி பண்ணியிருக்கார் என்பது தெரியாது. ஏனென்றால் விஜயா ஹாஸ்பிடல் வந்து அட்மிட்டாயிருக்கேன்.நர்வஸ் பிரேக்டாம். எம்.ஜி.ஆர் அவர்கள் வாரத்திற்கு இருமுறை போன் பண்ணி எப்படியிருக்கார் என்று விசாரிப்பார். அங்கே இரண்டு மாதம் சிகிச்சை எடுத்து நான் குணமான பிறகும், என்னை வெளியே விடடாமல்  அப்படியே உட்கார வச்சிட்டாங்க. ஏனென்றால் சி.எம். ஆபிஸில் இருந்து ஒரு போன் வருகிறது. நான் டிஸ்ஜார்ஜ் ஆன பிறகு அவருக்கிட்ட சொல்லிவிட்டு தான் போகனும் என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் எனக்கு போன் செய்தார். எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்கலா?  நான் டெல்லி போய்ட்டு இருக்கேன். வந்தவுடன் வந்து என்ன பாருங்க என்று சொன்னார்.அதன்படி அவரை பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது என்கிட்ட சொன்னாங்க. பார்ப்பா தம்பி ஒரு நடிகனுக்கு உடம்புதான் மூலதனம். அந்த உடம்பை ஜாக்கர்த்தியா பாத்துக்கொணும். ஸ்ட்ண்ட் பண்றேனு சொல்லி ரிஸ்க் எடுக்காதே. ஸ்டெண்ட் பண்ணதற்கு வேற ஆளங்க இருக்காங்க என்று அறிவுரை கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன