பொழுதுபோக்கு
2-வது திருமணம்; மாலையும் கழுத்துமாக மாதம்பட்டி ரங்கராஜ்: ஜாய் கிரிசில்டா இன்று வெளியிட்ட போட்டோ

2-வது திருமணம்; மாலையும் கழுத்துமாக மாதம்பட்டி ரங்கராஜ்: ஜாய் கிரிசில்டா இன்று வெளியிட்ட போட்டோ
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டாவை நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துகொண்டாதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தங்கள் திருமணம் முடிந்துவிட்டத்தாகவும் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், ஜாய் கிரிசில்டா பதிவிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில், ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷூடன் இணைந்து பென்குயின் என்ற திரைப்படத்தில் நடித்த இவர், பல முன்னணி பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்களின் வீடுகளில் விஷேஷங்களுக்கு சமையல் செய்து வழங்கி வருகிறார். இதன் மூலமாக விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் தனது சமையல் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவருக்கும், பிரபல செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் ஜாய் கிரிசில்டாவிற்கும் இடையே திருமணம் நடந்ததாக வெளியான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. ஆனால் இது குறித்து இதை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லாத நிலையில், தற்போது இந்த திருமணத்தை உறுதி செய்யும் வகையில், ஜாய் கிரிசில்டா திருமண புகைப்படத்தை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.Baby loading 2025🤰We are pregnant 🤰 6th month of pregnancy #madhampattyrangaraj #MrandMrsRangaraj #chefmadhampattyrangaraj pic.twitter.com/wA9s87AswJசமூக வலைத்தளங்களில் ஜாய் கிரிசில்டா பகிர்ந்துள்ள புகைப்படங்களில், அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக பெருமையுடன் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் பாரம்பரிய உடையணிந்து அவரது நெற்றியில் குங்குமம் வைக்கும் காட்சிகள் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இருவரும் பாரம்பரிய உடையில் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றனர். இந்த புகைப்படங்களுடன் ஜாய், “பேபி லோடிங் 2025 நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம். கர்ப்பத்தின் 6வது மாதம்” என்று பதிவிட்டுள்ளார்.இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜின் திருமண வாழ்க்கை குறித்த கேள்விகள் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்த அறிவிப்பு வெளியானதும், பலரும் “முதல் மனைவிக்கு என்ன ஆனார்? ரங்கராஜ் தனது முதல் மனைவியை இன்னும் விவாகரத்து பெறவில்லை. அவரது முதல் மனைவி இன்னும் அவரை கணவராகவே பார்க்கிறார். ஜெயம ரவியின் கதையை விட இவர்களின் கதை மோசமானது. பரிதாபமான மனிதர்…” போன்ற கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். அதே சமயம், “உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றாக இருங்கள்” என வாழ்த்துக்களையும் தெதிவித்து வருகின்றனர்.A post shared by Shruthi Rangaraj (@shruthi_rangaraj)இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ், விவாகரத்து வதந்திகளை மறுத்த நிலையில், அவரும், ரெங்கராஜும், அவர்களின் குழந்தைகளும் இடம்பெற்ற குடும்பப் புகைப்படங்களை வெளியிட்டு, தான் இன்னும் அவரது மனைவிதான் என்று கூறி வந்தார். இன்றும் அவரது இன்ஸ்டாகிராம் பயோவில் “வக்கீல் | தாய் | மதன்பட்டி ரெங்கராஜின் மனைவி | சமூக சேவகி என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ஸ்ருதியும், மதன்பட்டி ரெங்கராஜும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தனது புதிய திருமணம் அல்லது சர்ச்சைகள் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரை எந்த பொதுவான கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஜாய் தனது மகிழ்ச்சியை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டாலும், ரங்கராஜின் மவுனம் இன்னும் தொடர்கிறது. இந்த திடீர் திருமணமும், குழந்தை அறிவிப்பும் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. மதன்பட்டி ரெங்கராஜ் தனது மவுனத்தைக் கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.