பொழுதுபோக்கு
6 மாதம் கர்ப்பம்… மாதம்பட்டி ரங்கராஜ் 2-வது திருமணம்; காஸ்டியூம் டிசைனருடன் புதிய வாழ்க்கை

6 மாதம் கர்ப்பம்… மாதம்பட்டி ரங்கராஜ் 2-வது திருமணம்; காஸ்டியூம் டிசைனருடன் புதிய வாழ்க்கை
பிரபல சமையல் கலைஞரும், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் மிகவும் அறியப்பட்ட சமையல் கலைஞர்களில் ஒருவரான ரங்கராஜ், பிரதமர் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலருக்கும் அவர்களது வீட்டு விசேஷங்களுக்கு சமைத்து பெரும் புகழ் பெற்றவர். சமையலில் மட்டுமல்லாமல், ரங்கராஜ் இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரர் சரவணன் இயக்கிய ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன், அவரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், அதன் பிறகு அவர் பெரிய அளவில் வேறு எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், விஜய் டிவியின் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் விலகியதையடுத்து, ரங்கராஜ் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். A post shared by J Joy (@joycrizildaa)ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். அவர்களது திருமண வாழ்க்கையில் சில காலமாக பிரச்சனைகள் இருந்ததாகவும், அவர் ஜாய் கிரிஸில்டாவை காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஜாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரங்கராஜுடன் காதலர் தினத்தை கொண்டாடியது பற்றியும், தனது பெயரை ‘ஜாய் ரங்கராஜ்’ என்று மாற்றியதையும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டனர். ரங்கராஜின் ரசிகர்கள் அவரது இரண்டாவது திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அவரது முதல் மனைவி ஸ்ருதி இன்னும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஸ்ருதி ரங்கராஜ்’ என்ற பெயரிலேயே இருக்கிறார். மேலும், அவர்களது விவாகரத்து சட்டபூர்வமாக இன்னும் முடிவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.