இலங்கை
நல்லூர் கந்தசுவாமி ஆலய இரண்டாம் திருவிழா ; வெள்ளி மயில் வாகனத்தில் வந்த கந்தன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரண்டாம் திருவிழா ; வெள்ளி மயில் வாகனத்தில் வந்த கந்தன்
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் இரண்டாம் திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
இரண்டாம் திருவிழாவின் மாலை முருக பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர் .
அலங்கார பிரியன் நல்லூர் கந்த சுவாமியாருக்கு 25 நாட்களும் ஒவ்வொருநாளும் புதுப்புது அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதைப் பார்க்க கோடி கண்க
ள் வேண்டும்.
நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சப் பெருவிழாவிற்கு பெருமளவு புலம்பெயர் தமிழர்களும் நாட்டுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.