Connect with us

பொழுதுபோக்கு

அவர் ஒரு குழந்தை மாதிரி, ஆனா என்னை ட்ரெஸ்சே இல்லாம நடிக்க சொன்னார்; மிஷ்கின் பற்றி ரவி மரியா பேச்சு!

Published

on

mysskin

Loading

அவர் ஒரு குழந்தை மாதிரி, ஆனா என்னை ட்ரெஸ்சே இல்லாம நடிக்க சொன்னார்; மிஷ்கின் பற்றி ரவி மரியா பேச்சு!

தமிழ் திரையுலகில், வித்தியாசமான திரைக்கதைகளுக்கும், தனித்துவமான படங்களுக்கும் பெயர் பெற்றவர் இயக்குநர் மிஷ்கின். அதேபோல், நடிகர் ரவி மரியா தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர். இந்த இருவரின் தொழில்முறை உறவு, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான கதை பற்றி ரவி மரியா வாவ் தமிழாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கி, விமர்சன ரீதியாகவும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றவர் இயக்குநர் மிஷ்கின். அவரது திரைப்படங்களான சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு மற்றும் சைக்கோ போன்றவை அவருடைய இயக்கத்தில் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், மாவீரன் மற்றும் லியோ போன்ற படங்களில் நடிகராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்நிலையில் அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் ரவி மரியா சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படத்தில் ரவி மரியா முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, அது இருவருக்கும் இடையே ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியதாம். ரவி மரியா ஒரு பெரிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் உடை இல்லாமல் நடிக்க வேண்டும் என்று மிஷ்கின் கேட்டபோது, ரவி மரியா அதை உறுதியாக மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் இருவருக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் நினைத்தாராம். ஆனால், மிஷ்கினின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமானது என்பதால் ஒரு வாரத்திற்குப் பிறகு, ரவி மரியாவை மீண்டும் அழைத்து, ‘துப்பறிவாளன்’ படத்தில் கதாநாயகியின் மாமா கதாபாத்திரத்தில், மூன்று காட்சிகளில் மட்டும் வரும் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கக் கேட்டார். ரவி மரியா அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். மிஷ்கின் கலைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர், அதே சமயம் தனது படத்தின் தேவைகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டவர் என்று ரவி மரியா கூறினார்.இந்த அனுபவத்தைப் பற்றி ரவி மரியா பேசும்போது, மிஷ்கினை ஒரு ‘குழந்தை போன்ற மனம்’ கொண்டவர் என்று குறிப்பிட்டார். மிஷ்கின் ஒரு இயக்குநராக மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், ஷாட்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும் ரவி மரியா கூறினார். வெளியே பேசும் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும், மிஷ்கின் ஒரு அற்புதமான, இரக்க குணம் கொண்ட மனிதர் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன