Connect with us

இலங்கை

மூன்று என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்று மீட்பு!!

Published

on

Loading

மூன்று என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்று மீட்பு!!

அரியாலை செம்மணிப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் மூன்று மனித என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. புதிதாக அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதிகளுடன் சேர்த்தால் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதிகளின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நேற்று மூன்று என்புத்தொகு திகள் மீட்கப்பட்ட நிலையில், இதுவரை மீட்கப்பட்ட என்புத்தொகுதிகளின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண் காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவா தலைமையில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான ஞா.ரனித்தா, சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியற்துறை மாணவர்கள் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன