Connect with us

இலங்கை

பிரபாகரன் வீரச்சாவு! ஏன் சயனைட் அருந்தவில்லை? ஆதாரம் உண்மையை கூறும் பதிவு

Published

on

Loading

பிரபாகரன் வீரச்சாவு! ஏன் சயனைட் அருந்தவில்லை? ஆதாரம் உண்மையை கூறும் பதிவு

நஞ்சு மாலை அணிந்த போராளி ஒருவரின் நஞ்சு
வில்லை உடைந்து நெஞ்சில் குத்தி மரணம் நிகழ்ந்ததில் இருந்து நஞ்சு மாலை
அணிந்து இருந்த தலைவனை பாதுகாப்பு காரணத்திற்காக பாதுகாப்பு பொறுப்பாளர்
சொர்ணம் அண்ணா 1990 ஆண்டு இல் இருந்து நிறுத்தி இருந்தார்.

அதன்
பிறகு தனது கை துப்பாக்கி வலு கூடிய துப்பாக்கியை தலைவன் வைத்து இருந்தார்.
1996 ஆண்டு காலம் பின் 1998 ஆண்டு தனது கை துப்பாக்கியை மேலும் வலு கூடிய
துப்பாக்கி வைத்து இருந்தார். அத்தோடு பாதுகாப்பு பிரிவிற்கு Ak74 இயந்திர
துப்பாக்கி 1998 ஆண்டு 07 மாதம் 16 ஆம் திகதி சாளையில் படகில் இருந்து
இறக்கிய உடனே பெட்டியை உடைத்து தலைவன் பிரபாகரன் அவர்கள் அதில் வைத்தே
போராளிகளுக்கு சுட்டு  காட்டினார்.

Advertisement

அருகில் நின்றவன் நான் 2004
ஆண்டு தலைவன் முள்ளிவாய்க்காலில் எனது முகாமில் தலைவன் எங்களை சந்திக்கும்
போது தலைவன் கூறினார் ஈராக் போரில் சதாம் உசேன் கை துப்பாக்கி உடன்
பிடிபட்டது தவறு வீரனுக்கு அழகு இல்லை கையில் இருந்த துப்பாக்கியை
முன்னுக்கு வரும் எதிரியை சுட்டு விட்டு தான் தனது தலையில் சுட்டு இறந்து
இருக்க வேண்டும் என்றார்.

அத்தோடு தலைவன் கூறினார் சேகுபர சதாம்
உசேன் மாதிரி  நான் ஒருபோதும்  பிடிபட மாட்டேன் எனது வரலாறு அப்படி
நடக்காது என்று கூறி தனது கை துப்பாக்கியை மேசையில் வைத்து விட்டு இதனால்
சுட்டால்  எப்படி இருக்கும் என்று கேட்டு சிரித்தார் நாங்கள் அதிர்ந்து
போய் விட்டோம் அது ஒரு அற்புதமான சந்திப்பு அருகில் பால்ராஜ் அண்ணா  சூசை
அண்ணா இருவரும் இருந்தார்கள்.

தலைவனை குறைந்தது 1000 தடவைகள்
பார்த்து இருக்கிறேன் தலைவன் உடன் கடலில் குளித்து நீந்தி இருக்கிறேன்
கரையில் மதி அக்கா துவாரகா சமைத்து தர சாப்பிட்டு இருக்கிறேன் சாளை
தொடுவாயில் இறால் பிடித்து இருக்கிறேன் தலைவன் வேட்டை light பிடித்து
இருக்கிறேன் சுடபட்ட பன்றி மான் போன்ற மிருகத்தை எடுத்து சமைத்து
இருக்கிறோம் இப்படி தலைவனை கட்டி அணைத்து இருக்கிறேன் தலைவன் குளிக்க
கிணற்றில் தண்ணீர் அள்ளி கொடுத்து இருக்கிறேன் இப்படி எனக்கு தலைவனை
அருகில் இருக்கும் பாக்கியம் கிடைத்து அதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுவேன்.

Advertisement

தலைவன் எப்படி பட்டவன் என்று இறுதி சண்டை பற்றி எதிரி கூறிய பதிவு.  கீழே

19ம்
திகதி காலை பிரபாகரனும் சூசையும் ஏனைய 50 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள்
என சண்டை உறுதிபடுத்தியது வரை அவர்களால் தொடர்ந்து பதுங்கியே இருப்பதை தவிர
அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதி தோட்டா இருக்கும் வரை, கடைசி
பயங்கரவாதி இருக்கும்வரை அந்த கடைசி குழு போராடிக்கொண்டிருந்ததை நான்
கூறியே ஆக வேண்டும். அவர்கள் எங்கள் எதிரியாக இருந்தாலும் அவர்கள் உண்மையான
சண்டை வீரர்கள்.

தலைவன் தனது கை துப்பாக்கியால் தலையை சுட்டார்
தலைவனின்.கை துப்பாக்கி அருகில் வைத்து தலையை சுட்டால் அப்படி தான் தலையை
உடைக்கும் இதுவே நிஜம்.

Advertisement

கடற்புலிகள் சூசை அண்ணா  குற்றம் இளைத்த
சிலருக்கு தண்டனை கொடுத்தார் என்று சொல்லுவார்கள்  மண்டையில் சுட்டால் தலை
சிதறும்.என்பார்கள் சூசை அண்ணாவின் கை துப்பாக்கியே இப்படி என்றால் தலைவன்
எமக்கு சுட்டு கட்டிய துப்பாக்கி எப்படி.இருக்கும் என்று நினைக்கிறேன்.

உண்மையில்
தலைவன் தனது துப்பாக்கியால் தனது தலையை சுட்டார் என்பது தான் உண்மை அதை
தொடர்ந்து அருகில் இருந்த போராளிகளும் சுட்டு வீரமரணம் அடைந்தார்கள் என்பது
தான் உண்மை. எல்லாம் 19.05.2009 காலை 9.45 மணிக்கு நடந்தது இந்த நேரத்தில்
தலைவன் பிரபாகரன் வீர மரணம்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754165614.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன