இலங்கை
இலங்கையில் நேர்ந்த துயரம் ; கழிவு நீர் குழியில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

இலங்கையில் நேர்ந்த துயரம் ; கழிவு நீர் குழியில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு
ஹட்டன் பொகவந்தலாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவர் கழிவுநீர் குழியில் விழுந்து உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தத் துயரமான சம்பவம் இன்று (03.08.2025) மாலை 7 மணியளவில், பொகவந்தலாவா காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிவ் தோட்டத்தின் கீழ் பிரிவில் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் உடல் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொகவந்தலாவ காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.