Connect with us

இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் இந்தியா வெற்றி!

Published

on

Loading

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிராக கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நிறைவடைந்த ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை இந்தியா ஈட்டியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

Advertisement

இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நிலையில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது.

இதற்கமைய 23 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி யசஸ்வி ஜெய்ஸ்வாலின் சதத்தின் உதவியுடன் 396 ஓட்டங்களைக் குவித்தது.

Advertisement

இந்தநிலையில் இங்கிலாந்து அணிக்கு 374 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி வெற்றி இலக்கை நோக்கித் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் 367 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன