சினிமா
என்ர பேச்சைக் கேட்கவே இல்ல…. A1 தொழிநுட்பத்தால் கடும் கோபமடைந்த தனுஷ்..!

என்ர பேச்சைக் கேட்கவே இல்ல…. A1 தொழிநுட்பத்தால் கடும் கோபமடைந்த தனுஷ்..!
2013ம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படமான “ராஞ்சனா” முக்கியமான திருப்புமுனையாக நடிகர் தனுஷின் பாலிவுட் பயணத்தை தொடங்கி வைத்தது. இந்தப் படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தனுஷ் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் கிளைமாக்ஸை AI மூலம் மாற்றி, புதிய வடிவில் ரீ-ரிலீஸ் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதற்கான எதிர்வினையாக, நடிகர் தனுஷ் தன் வேதனையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “இது என்னை முற்றிலும் பாதித்து விட்டது. நான் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், அவர்கள் இப்படிச் செய்திருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. இது நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புக்கொண்ட படம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.ராஞ்சனா படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்ததுடன், சோனம் கபூர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தென்னிந்திய பாணியில் ஒரு காதல் கதையை ஹிந்தியில் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த படம், காதல், தியாகம் மற்றும் சமூக வன்முறையின் பின்னணியுடன் சிறப்பாக அமைந்திருந்தது.அத்தகைய படம் தற்போது, AI தொழில்நுட்பத்தின் உதவியால், இறுதிக்காட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் தனுஷ் மிகுந்த கோபம் கொண்டுள்ளார்.