Connect with us

சினிமா

என் கால்களைப் பிடிக்கணும்..“அப்படிப்பட்டவங்கதான் ஆண்மையுள்ள ஆண்!வைரலாகும் டிடியின் கருத்து

Published

on

Loading

என் கால்களைப் பிடிக்கணும்..“அப்படிப்பட்டவங்கதான் ஆண்மையுள்ள ஆண்!வைரலாகும் டிடியின் கருத்து

பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைப்பார்கள். இந்நிலையில் இவர்,   சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது,  தனது கணவர் குறித்து தனது எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொண்டார்.அதில் அவர்,  “என் கணவர், நான் வேலை முடிச்சு வீடு வரும்போது என் கால்களைப் பிடிக்கணும். எனக்காக காபி தயாரிக்கணும். நான் நடந்து போறபோது என் கைகளைப் பிடிச்சு, என் கைப்பையைச் சுமக்கணும். அப்படிப்பட்டவங்கதான் உண்மையான ஆண்மையுள்ள ஆண்மகன்” என்று தெரிவித்தார்.இந்த கருத்துகள், நிகழ்ச்சியில் இருந்தவர்களிடையே சிரிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விவாதத்திற்கும் உள்ளாக்கியிருந்தது.சிலர் இவரது பார்வையை, பரஸ்பர அன்பும் மரியாதையும் முக்கியம் என்பதற்கான வெளிப்பாடு எனப் பார்த்து ஆதரவு தெரிவித்தனர்.மேலும், திருமண உறவில் நவீன பார்வை கொண்டு பேசியவர் எனவும் வரவேற்றனர்.ஆனால், மற்றொரு தரப்பினர் இது ஆண்களின் பாரம்பரிய பொறுப்புகளை கேலி செய்யும் வகையில் உள்ளது என விமர்சனம் தெரிவித்துள்ளனர்.அவர்களில் ஒருவர், “அப்போ இந்த உலகத்தில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன்தான் உண்மையான ஆண்மையுள்ள ஆண் போல!” என கிண்டலாக கருத்து பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு, மேலும் வைரலான நிலையில், கலகலப்பான மீம்ஸ்களாகவும் உருவெடுத்தது.இந்நிலையில், திவ்யதர்ஷினியின் இந்தத் தனிப்பட்ட கருத்துகள், திருமண உறவில் புரிதலும், ஒத்துழைப்பும், பாசமும் எவ்வளவு முக்கியம் என்பதை நினைவூட்டுவதாகவும், பாரம்பரிய ஆண்மை குறித்து மறு ஆய்வைத் தூண்டும் புதிய கோணமாகவும் பலர் பாராட்டியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன